×

புத்தி கிளினிக்கில் 16 வகை சிகிச்சைகளுக்கு சிறப்பு முகாம்

 

கோவை, ஜூலை 21: கோவை புத்தி கிளினிக்கில் 16 வகை சிகிச்சைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 22ம் ம் தேதி நடைபெறுகின்றது. இது குறித்து கோவை புத்தி கிளினிக்கின் நிறுவனர் கூறியதாவது: மூளைக்குள் ஊடுருவாமல் மூளை தூண்டுதல் சிகிச்சை நுட்பம் என்பது நியூரோ சைக்கியாட்ரியில் (நரம்பியல் மனசிகிச்சை) ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளது. தலைக்கபாலத்தை திறக்காமல் மூளை சிகிச்சையை காண டிஎம்எஸ், டிஇஎஸ், விஎன்எஸ், எப்எம்எஸ் ஆகிய நியூரோ சைக்காட்ரிக் நரம்பியல் மனநல சிகிச்சையில் புதிய சகாப்தம் படைக்கின்றன.

இந்த சிகிச்சை முறையில் பல கோளாறுகளை கண்டறிந்து தீர்க்க முடியும். மூளை மற்றும் அதன் சிக்கலான தொடர்புகளை நாங்கள் ஆய்ந்து அறிந்த வகையில் மேற்கண்ட சிகிச்சை முறை அறிய பலன்களை வழங்குகிறது. மேலும், இம்முகாம் குறித்த விவரங்கள் தெரிந்துகொள்ள 95000-10056 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post புத்தி கிளினிக்கில் 16 வகை சிகிச்சைகளுக்கு சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Buddhi Clinic ,Coimbatore ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை